Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

ADDED : ஆக 07, 2019 08:28 AM


Google News
Latest Tamil News
* எங்கள் ஊரிலுள்ள மலைகளை, பவுர்ணமியன்று சுற்றலாமா?

ஜே.பானு, கடலுார்

மலை, நதிகளை எல்லாம் தெய்வமாக வழிபடுவது நம் கலாசாரம். மூலிகைச் செடிகள் நிறைந்திருப்பதால் மலையில் வீசும் காற்று மருத்துவ குணம் மிக்கது. திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் போன்ற கோயில்கள் இருக்கும் மலைகள் அனைத்தையும் பவுர்ணமியன்று சுற்றலாம். இதனால் உங்களுக்கு மட்டுமின்றி, ஊருக்கே நன்மை ஏற்படும்.

* உஷத் காலம் என்றால் என்ன?

எம்.உஷா, மதுரை

உஷத் காலம், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, ராக்காலம், அர்த்த ஜாமம் என ஆறுகால பூஜைகள் தினமும் கோயிலில் நடக்கும். இதில் 'உஷத்' என்பது விடியலைக் குறிக்கும். அதிகாலைப் பொழுதில் நடக்கும் இந்த பூஜையை கோயிலில் தரிசித்தால் வளமும், நலமும் சேரும்.

* பிறந்த குழந்தையை எப்போது கோயிலுக்கு அழைத்துச் செல்லலாம்?

ஆர்.மீனாட்சி, போத்தனுார்

பிறந்து 60 நாள் ஆனபின், நல்ல நாள் பார்த்து கோயிலுக்கு சென்று குழந்தையின் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்யுங்கள்.

* எதிர்மறை எண்ணம் அகல பரிகாரம் உண்டா

தேவி, மவுலிவாக்கம்

மனதில் எழும் எண்ணங்களை, சீர் துாக்கி பார்த்து நல்ல முடிவு எடுங்கள். கடவுள் நம்பிக்கை, நல்ல நண்பர்கள், நல்ல புத்தகங்களால் மனம் துாய்மையாகும். சதுர்த்தி திதி அன்று விரதமிருந்து விநாயகரை வழிபடுங்கள். தினமும் 108 முறை 'ஓம் சக்தி விநாயக நம'வை ஜபியுங்கள்.

மறுபிறவி எடுத்தவர்களுக்கு செய்யும் தர்ப்பணம் யாரைச் சேரும்?

டி.தர்ஷன், ஆவடி

இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்வது நம் கடமை. மறுபிறவி பற்றிய ரகசியங்களை அறிந்தவர் கடவுள் ஒருவரே. அதை பற்றிய ஆராய்ச்சி வேண்டாம். தர்ப்பணத்தின் பலன், மறுபிறவி எடுத்தாலும் குறிப்பிட்ட உயிரையே சென்றடையும்.

தேதி, நட்சத்திரம் - பிறந்த நாளை எதில் கொண்டாட வேண்டும்?

எஸ்.ரிஷிகேஷ், புதுச்சேரி

பிறந்த நட்சத்திரத்தன்று இஷ்ட தெய்வத்திற்கு அர்ச்சனை செய்து வழிபடுவதே நம் மரபு. கொண்டாட்டம் என்ற பெயரில் ஆடம்பரம் செய்யாதீர்கள். இயன்ற அளவில் அன்ன தானம், வஸ்திர தானம் செய்யுங்கள்.

மனபலம் அதிகரிக்க மந்திரம் சொல்லுங்கள்

ப.பிரணவ், காஞ்சிபுரம்

புத்தியை பலப்படுத்தினால் மனம் உறுதி பெறும். குழந்தைகளிடம் 'கடவுளே! எனக்கு நல்ல புத்தி கொடு' என்று வேண்டும்படி அறிவுரை சொல்வர் பெற்றோர். காயத்ரி மந்திரத்தின் நோக்கம் இதுவே. காலை, பகல், மாலையில் திருநீறு அல்லது திருமண் இட்டு 'ஓம் நமசிவாய' அல்லது 'ஓம் நமோ நாராயணாய' என்று ஜபியுங்கள்.

தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மை என்ன?

எம்.திவ்யா, சென்னை

எப்போதும் எதையாவது சிந்தித்து கொண்டிருந்தால் நிம்மதியின்மை, ரத்தக்கொதிப்பு போன்றவை ஏற்படும். மனதிற்கு ஓய்வு அளிப்பது தியானம். கண்களை மூடி மனதை ஒருமுகப்படுத்தி, கடவுளின் திருவுருவைச் சிந்தியுங்கள். மனமும், உடலும் நலமாக இருக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us