Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

ADDED : மார் 23, 2018 09:14 AM


Google News
Latest Tamil News
மன்னுபுகழ்க் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே

தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்

கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென்கருமணியே

என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ

(குலசேகராழ்வார் பாடிய பாசுரம்)

பொருள்: நிலையான புகழ் மிக்க கோசலையின் மணிவயிற்றில் அவதரித்தவனே! தென்திசையிலுள்ள இலங்கை மன்னன் ராவணனின் தலைகளை வீழ்த்தியவனே! சிவந்த பொன்னாலான, பெரிய கோட்டைகள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தில் அருள்புரியும் கரியமாணிக்கமே! அமுதமாக எனக்கு இனிமை சேர்ப்பவனே! ரகு குலத்தில் அவதரித்தவனே! துயில்வாயாக.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us