பிரசாதம் இது பிரமாதம் - பால் பாயாசம்
பிரசாதம் இது பிரமாதம் - பால் பாயாசம்
பிரசாதம் இது பிரமாதம் - பால் பாயாசம்
ADDED : செப் 13, 2019 10:47 AM

தேவையான பொருட்கள்
பச்சரிசி - ஒரு கப்
பால் - 4 கப்
சர்க்கரை - ஒரு கப்
ஏலக்காய்த்துாள் - ஒரு சிட்டிகை
முந்திரி - தேவையான அளவு
நெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை
வெறும் வாணலியில் அரிசியை லேசாக வறுத்து ரவை பதத்துக்கு உடைத்து வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சி, பாதி பாலைத் தனியாக வைக்கவும். மீதி பாலில் உடைத்த அரிசி ரவையைச் சேர்த்து வேகவிடவும். இடையிடையே எடுத்து வைத்த பாலையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும் அடுப்பை 'சிம்'மில் வைக்கவும்.
முழு பாலையும் ஊற்றி ரவை நன்றாக குழைய வெந்ததும், நன்கு மசிக்கவும். பின்னர் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கரைந்ததும் ஏலக்காய்த்துாள் சேர்க்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து, நெய்யுடன் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். இது திருப்புல்லாணி கோயில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.