Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/பாடுங்க! பாடுங்க!

பாடுங்க! பாடுங்க!

பாடுங்க! பாடுங்க!

பாடுங்க! பாடுங்க!

ADDED : நவ 25, 2011 01:38 PM


Google News
Latest Tamil News
திருட்டு, ஏமாற்று, நம் கவனக்குறைவு, ஆசை என பல்வேறு வகையில் நமக்கு பொருள் இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறான கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்கவும், இழந்த பொருளை திரும்பப் பெறவும், சுந்தரர் பாடிய இந்தப்பாடல்களை பாடுவோமா!

பொன் செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கு அசைத்தீர்

முன் செய்த மூஎயிலும் எரித்தீர் முதுகுன்று அமர்ந்தீர்

மின்செய்த நுண் இடையாள் பரவை இவள் தன் முகப்பே

என் செய்தவாறு அடிகேள் அடியேன் இட்டளம் கெடவே.

உம்பரும் வானவரும் உடனே நிற்கவே எனக்குச்

செம்பொனைத் தந்தருளித் திகழும் முதுகுன்று அமர்ந்தீர்

வம்பு அமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள்

எம்பெருமான் அருளீர் அடியேன் இட்டளம் கெடவே.

பத்தா பத்தர்களுக்கு அருள்செய்யும் பரம்பரனே

முத்தா முக்கணனே முதுகுன்றம் அமர்ந்தவனே

மைத்து ஆரும் தடங்கண் பரவை இவள் வாடாமே

அத்தா தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே.

மங்கை ஓர்கூறு அமர்ந்தீர் மறைநான்கும் விரித்து உகந்தீர்

திங்கள் சடைக்கு அணிந்தீர் திகழும் முதுகுன்று அமர்ந்தீர்

கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டிருந்தாள் முகப்பே

அங்கணனே அருளாய் அடியேன் இட்டளம் கெடவே.

மையாரும் மிடற்றாய் மருவார் புரம்மூன்று எரித்த

செய்யார் மேனியனே திகழும் முதுகுன்று அமர்ந்தாய்

பைஆரும் அரவுஏர் அல்குலாள் இவள் வாடுகின்றாள்

ஐயா தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே.

நெடியான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும்

முடியால் வந்து இறைஞ்ச முதுகுன்றம் அமர்ந்தவனே

படிஆரும் இயலாள் பரவை இவள்தன் முகப்பே

அடிகேள் தந்தருளீர் அடியேன் இட்டளம் கெடவே.

கொந்தணவும் பொழில்சூழ் குளிர்மாமதில் மாளிகைமேல்

வந்தணவும் மதிசேர் சடைமாமுது குன்று உடையாய்

பந்தணவும் விரலாள் பரவை இவள் தன் முகப்பே

அந்தணனே அருளாய் அடியேன் இட்டளம் கெடவே.

பரசுஆரும் கரவா பதினெண் கணமும்சூழ

முரசார் வந்து அதிர முதுகுன்றம் அமர்ந்தவனே

விரைசேரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பே

அரசே தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே.

ஏத்தாது இருந்து அறியேன் அமையோர் தனி நாயகனே

மூத்தாய் உலகுக்கு எல்லாம் முதுகுன்றம் அமர்ந்தவனே

பூத்தாரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பே

கூத்தா தந்தருளாய் கொடியேன் இட்டளம் கெடவே.

பிறை ஆரும் சடைஎம்பெருமான் அருளாய் என்று

முறையாய் வந்து அமரர் வணங்கும் முதுகுன்றூர் தம்மை

மறையார்தம் குரிசில் வயல்நாவல் ஆரூரன் சொன்ன

இறையார் பாடல் வல்லார்க்கு எளிதாம் சிவலோகம் அதே.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us