Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

ADDED : செப் 23, 2019 10:03 AM


Google News
Latest Tamil News
செப்.21, புரட்டாசி 4: திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர் 5,008 வடை மாலை அலங்காரம், சிருங்கேரி அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை, விருதுநகர் மாவட்டம் திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கருட வாகனம், திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை

செப்.22, புரட்டாசி 5: மத்யாஷ்டமி, வியதிபாத மகாளயம், லட்சுமி விரதம், சங்கரன் கோவில் சங்கர நயினார் மீது சூரிய தரிசனம், ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் பவனி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்

செப்.23, புரட்டாசி 6: அவிதவா நவமி, பத்ராசலம் ராமர் புறப்பாடு, சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்

செப்.24, புரட்டாசி 7: சுவாமிமலை முருகன் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம், திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு

செப்.25, புரட்டாசி 8: ஏகாதசி விரதம், சன்யஸ்த மகாளயம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு, அகோபிலமடம் 18 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.

செப்.26, புரட்டாசி 9: பிரதோஷம், சிவன் கோயில்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரர் அபிஷேகம், சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை

செப்.27, புரட்டாசி 10: சஸ்திர ஹத மகாளயம், மாத சிவராத்திரி, அருணந்தி சிவாச்சாரியார் குருபூஜை, திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி திருமஞ்சனம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் பவனி, அகோபிலமடம் 12வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us