Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

ADDED : செப் 27, 2019 10:17 AM


Google News
Latest Tamil News
செப்.28, புரட்டாசி 11: மகாளய அமாவாசை, சிருங்கேரி சந்திர சேகர பாரதி சுவாமிகள் ஆராதனை, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் திருமஞ்சனம், சிருங்கேரி சாரதாம்பாள் மகா அபிேஷகம், விருதுநகர் மாவட்டம் திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கருட வாகனம், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் நடையழகு சேவை.

செப்.29, புரட்டாசி 12: நவராத்திரி ஆரம்பம், நெல்லை காந்திமதி லட்சார்ச்சனை, மதுரை மீனாட்சி ராஜராஜேஸ்வரி அலங்காரம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார காட்சி, திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், கழுகுமலை முருகன், மைசூரு சாமுண்டீஸ்வரி கோயில்களில் நவராத்திரி உற்ஸவம் ஆரம்பம்

செப்.30, புரட்டாசி 13: சந்திர தரிசனம், திருப்பதி, மதுரை தல்லாகுளம், கரூர், ஸ்ரீவில்லிபுத்துார், நாட்டரசன் கோட்டை, குணசீலம், உப்பிலியப்பன் கோயில் தலங்களில் புரட்டாசி உற்ஸவம் ஆரம்பம், சிருங்கேரி சாரதாம்பாள் மகேஸ்வரி அலங்காரம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் விசேஷ தரிசனம்

அக்.1, புரட்டாசி 14: திருப்பதி ஏழுமலையான் சின்ன சேஷ வாகனம், இரவு அம்ச வாகனம், மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கிருஷ்ண அவதாரம், சிம்ம வாகனம், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் சந்திர பிரபையில் பவனி

அக்.2, புரட்டாசி 15: சதுர்த்தி விரதம், திருமலைநம்பி திருநட்சத்திரம், திருப்பதி ஏழுமலையான் முத்து பந்தல் அருளிய காட்சி, மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசர் ராம அவதாரம், அனுமன் வாகனம், சிருங்கேரி சாரதாம்பாள் வைஷ்ணவி அலங்காரத்தில் கருட வாகனம்

அக்.3, புரட்டாசி 16: உபாங்க லலித கவுரி விரதம், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசர் கஜேந்திர மோட்சம், கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசர் கருட வாகனம், திருப்பதி ஏழுமலையான் சர்வ பூபால வாகனம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார காட்சி, கரிநாள்

அக்.4, புரட்டாசி 17: சஷ்டி விரதம், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசர் ராஜாங்க சேவை, உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் பவனி, திருப்பதி ஏழுமலையான் மோகினி அலங்காரம், இரவு கருடசேவை, சிருங்கேரி சாரதாம்பாள் வீணைவாணி அலங்காரம், திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை மாயாண்டி சுவாமிகள் குருபூஜை





      Our Apps Available On




      Dinamalar

      Follow us