Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

ADDED : நவ 08, 2019 09:11 AM


Google News
Latest Tamil News
* நவ.8, ஐப்பசி 22: ஏகாதசி விரதம், உத்தான ஏகாதசி, வள்ளியூர் முருகன் கோயிலில் வள்ளி திருக்கல்யாணம், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் சயனத் திருக்கோலம், இந்தளூர் பரிமளரங்கராஜர் யானை வாகனம், மாயவரம் கவுரிமாயூரநாதர் வெள்ளி படிச்சட்டத்தில் புறப்பாடு, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபத்தில் திருமஞ்சனம், மதுரை கூடல் அழகர் புறப்பாடு, நெல்லை நெல்லையப்பர் காந்திமதி திருமஞ்சனம்

* நவ.9, ஐப்பசி 23: சனி மகாபிரதோஷம், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் எண்ணெய்க்காப்பு உற்ஸவம், சாதுர்மாஸ்ய சமாப்தி, இந்தளூர் பரிமள ரங்கராஜர் சந்திர பிரபையில் பவனி, மாயவரம் கவுரிமாயூர நாதர் நாற்காலி மஞ்சத்தில் பவனி, சிவாலயங்களில் நந்தீஸ்வரர் அபிேஷகம்

* நவ.10, ஐப்பசி 24: முகூர்த்தநாள், இந்தளூர் பரிமள ரங்கராஜர் சேஷ வாகனம், மாயவரம் கவுரிமாயூர நாதர் கற்பக விருட்சம், காமதேனு வாகனம், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் ஊஞ்சல் சேவை, உத்திர மாயூரம் வள்ளலார் சன்னதியில் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் பவனி.

* நவ.11, ஐப்பசி 25: வைகுண்ட சதுர்த்தசி, திருமூலர் குருபூஜை, மாயவரம் கவுரி மாயூரநாதர் ரிஷப வாகனம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம், திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணர் ஊஞ்சல் சேவை, இந்தளூர் பரிமளரங்க ராஜர் கருட வாகனம், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு

* நவ.12, ஐப்பசி 26: பவுர்ணமி பூஜை, நெடுமாற நாயனார் குருபூஜை, கார்த்திகா கவுரி விரதம், லட்சுமி பூஜை, துளசி விரதம், இந்தளூர் பரிமள ரங்கராஜர் அனுமார் வாகனம், மாயவரம் கவுரிமாயூர நாதர் பவனி, திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் கோயில்களில் கிரிவலம், குரங்கணி முத்துமாலையம்மன் பவனி, திருப்போரூர் முருகன் சிறப்பு அபிேஷகம்

* நவ.13, ஐப்பசி 27: கார்த்திகை விரதம், இடங்கழி நாயனார் குருபூஜை, இந்தளூர் பரிமள ரங்கராஜர் யானை வாகனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம், சுவாமிமலை, விராலிமலை முருகன் புறப்பாடு, வேலுார் மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் தங்கத்தேர்.

* நவ.14, ஐப்பசி 28: இந்தளூர் பரிமள ரங்கராஜர் திருக்கல்யாணம், இரவு வெள்ளி ரதம், மாயவரம் கவுரி மாயூர நாதர் ஏகாந்த மஞ்சத்தில் பவனி, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புறப்பாடு





      Our Apps Available On




      Dinamalar

      Follow us