Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தவறான ஆட்சியாளர்கள்

தவறான ஆட்சியாளர்கள்

தவறான ஆட்சியாளர்கள்

தவறான ஆட்சியாளர்கள்

ADDED : ஜன 27, 2017 12:13 PM


Google News
Latest Tamil News
ஒரு நாட்டின் அரசன் மிகவும் நல்லவன், நீதிமான். சைவ உணவுகளையே உண்பான். அவனை எப்படியாவது அசைவம் சாப்பிட வைக்க வேண்டுமென திட்டம் போட்டான் அரண்மனை சமையல்காரன். சமையலில் மகாகெட்டிக்காரன்.

ஒரு பறவையை சமைத்து சைவ உணவுடன் லாவகமாகக் கலந்து அரசனுக்கு பரிமாறி விட்டான். அரசனும், சமையல்காரனை ஆகா ஓகோவென புகழ்ந்து தள்ளிக்கொண்டே சாப்பிட்டான். இதுபோன்ற உணவு தினமும் வேண்டுமென்று உத்தரவும் போட்டு விட்டான். சமையல்காரனும் அதன்படியே செய்தான்.

இந்தக் கதையைச் சொன்னவர் கிருஷ்ணர். கேட்டவன் கவுரவர்களின் தந்தை திருதராஷ்டிரன். கதையை முடித்த கிருஷ்ணன், ''திருதராஷ்டிரரே! இப்போது சொல்லும்! இங்கே சமையல்காரன் குற்றவாளியா? ராஜா குற்றவாளியா?'' என்றான்.

திருதராஷ்டிரன் தெளிவாகச் சொன்னான்.

''ஒரு நாட்டின் தலைமைப்பொறுப்பில் இருப்பவன், அனைத்தையும் பகுத்தறிந்து கண்டுபிடிக்க தெரிந்தவனாக இருக்க வேண்டும். சமையல்காரன் செய்தது சிறு குற்றம். ஒரு உணவில் கூட மாற்றம் இருப்பதை அறியாத ராஜா, நாட்டை எப்படி ஆள முடியும்! அவனே குற்றவாளி,'' என்றான்.

உடனே கிருஷ்ணர் சொன்னார்.

''நீங்களும் இதே தவறைத்தான் செய்கிறீர்கள் திருதராஷ்டிரரே! உங்கள் பிள்ளைகள் தவறு செய்கிறார்கள் என்று தெரிந்தும், அதை தடுத்து நிறுத்தாமல் அழிவுக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் சொல்வது சரிதானே!'' என்று கேட்கவும், திருதராஷ்டிரனால் எந்தப்பதிலும் சொல்ல முடியவில்லை.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us