Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சாமியார் மனசு

சாமியார் மனசு

சாமியார் மனசு

சாமியார் மனசு

ADDED : ஏப் 28, 2017 11:10 AM


Google News
Latest Tamil News
ஆற்றங்கரையோரம் அரச மரத்தடிப் பிள்ளையார் கோவிலில், குண்டுக்கல் சாமியார் என்பவர் இருந்தார். பசித்தால் ஊருக்குள் பிச்சை கேட்பார். மற்ற நேரத்தில் மரத்தடி கல்லின் மீது அமர்ந்திருப்பார். ஊரார் அவரை 'குண்டுக்கல் சாமியார்' என்றனர்.

ஒருநாள் சாமியார் பிச்சையெடுக்க சென்ற நேரத்தில் ஒருவர் வந்தார். பிள்ளையாரை வணங்கி விபூதி இட்டுக் கொண்டு குண்டுக்கல்லில் அமர்ந்தார். திரும்பி வந்த சாமியார் குண்டுக்கல்லில் யாரோ ஒருவர் இருப்பதை கண்டு,“நான் உட்காரும் கல்லில் நீ எப்படி உட்காரலாம்? இப்போதே இடத்தை காலி பண்ணு,” என கத்தினார்.

“சாமியாரான உங்களுக்கு, இந்தக் கல்லை விட மனசில்லையா? துறவியான பட்டினத்தார் திருவோட்டைக் கூட, ஒரு சொத்து என்று எண்ணி, அதை கீழே போட்டு உடைத்தார். உங்களால் இந்த கல்லில் உட்காருவதை கூட பொறுக்க முடியவில்லை...

ஊரார், உம்மையும் சாமியார் என்பதெல்லாம் கொடுமை தான்!” என்றார் புதியவர்.

தன் மனதின் இயல்பை அறிந்த சாமியார் மவுனமானார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us