Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/அனைத்தும் கடவுள்மயம்

அனைத்தும் கடவுள்மயம்

அனைத்தும் கடவுள்மயம்

அனைத்தும் கடவுள்மயம்

ADDED : ஜூலை 05, 2011 10:07 AM


Google News
Latest Tamil News
* மண்ணும், காற்றும், சூரியனும், சந்திரனும் உன்னையும் என்னையும் சூழ்ந்து நிற்கும் உயிர்களும், நீயும் நானும் தெய்வமென்று வேதம் கூறுகிறது. இவை தான் தெய்வம். இதனைத்தவிர வேறு தெய்வமில்லை.

* பெண்கள் ஆண்களிடம் அன்புடன் இருக்க வேண்டுமானால் ஆண்கள் பெண்களிடம் அசையாத பக்தி செலுத்த வேண்டும். பக்தியே பக்தியை விளைவிக்கும்.

* உலகில் உள்ள அனைத்துவிதமான இன்பங்களும் நமக்கு தேவை. அவற்றை பெற தேவையான அறிவுத்திறனை நமக்கு தரும்படி தெய்வத்திடம் கேட்க வேண்டும்.

* உலகப்பொருள்களிடம் நாம் ஆசையை துறந்து விட்டால் அவை நமக்கு வசப்படுகின்றன, ஆசை உள்ளவரை அவற்றுக்கு நாம் வசப்படுகிறோம்.

* அனைத்தும் கடவுள் மயம் என்று உணர்ந்தவன் உலகத்தில் எதற்கும், எங்கும் பயப்பட மாட்டான்.

* தர்மத்தாலும், கருணையாலும் கிடைக்கும் வெற்றியே நிலையானதாகும், இதனை அறியாதவர்கள் உலக வரலாற்றை அறியாதவராகின்றனர்.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us