Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/மனோதைரியமே நிஜமான பக்தி

மனோதைரியமே நிஜமான பக்தி

மனோதைரியமே நிஜமான பக்தி

மனோதைரியமே நிஜமான பக்தி

ADDED : மார் 22, 2011 09:03 AM


Google News
Latest Tamil News
* தெய்வம் என்பது அறிவுக்கடல். அதில் ஒரு திவலை நாம். அதற்கும் நமக்கும் இடையில் ஒரு குழாய் இருக்கிறது. அதை அகங்காரம் என்ற மாசு மூடியிருக்கிறது. அகங்காரத்தை நீக்கிவிட்டால் தெய்வ சக்தியும் ஞானமும் உண்டாகும்.

* பிறருடைய சொத்தை அபகரிக்க வேண்டும் என்று மனதளவில் நினைத்தாலே திருடனாகிறான். திருடனுக்குரிய தண்டனை அவனுக்கு மனிதர்களால் விதிக்கப்படாவிட்டாலும், கடவுளால் அவசியம் விதிக்கப்படுகிறது.

* வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால், அவன் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் அனைத்திலும் மிக உயர்ந்த குணம் பொறுமையாகும்.

* உண்மையான பக்தியிருந்தால் மனோதைரியம் ஏற்படும், மனோதைரியம் இருந்தால் உண்மையான பக்தி உண்டாகும்.

* மண்ணும், காற்றும், சூரியனும், சந்திரனும் உன்னையும், என்னையும் சூழ்ந்து நிற்கும் உயிர்களும், நீயும், நானும் தெய்வமென்று வேதம் கூறுகிறது, இதனைத் தவிர வேறு தெய்வமில்லை.

* தெய்வத்தை நம்பு, உண்மை பேசு, நியாயத்தை செய், அனைத்து இன்பங்களையும் பெறுவாய்.

-பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us