Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/உன்னை முதலில் திருத்து!

உன்னை முதலில் திருத்து!

உன்னை முதலில் திருத்து!

உன்னை முதலில் திருத்து!

ADDED : மே 08, 2011 04:05 PM


Google News
Latest Tamil News
* தன்னை மற, தெய்வத்தை நம்பு, உண்மை பேசு, நியாயத்தை எப்போதும் செய், அனைத்து இன்பங்களையும் பெறுவாய்.

* ஒரு பொருளுடன் உறவாடும் போது, உன்மனம் அப்பொருளின் வடிவமாக மாறிவிட வேண்டும். அப்போதுதான் அந்தப் பொருளை நீ நன்றாக அறிந்தவனாவாய்.

* அலையைக் கட்டலாம், காற்றை நிறுத்தலாம், மனவுறுதி கொண்ட வீரனுடைய குறிக்கோளை எவராலும் தடுக்க முடியாது.

* நூறு மனிதர்கள் சேர்ந்து ஒருவனை நாயகன் என்று முடிவு செய்தால் அவனுக்கு மிகுந்த வலிமை ஏற்படுகிறது.

* தொழில் செய்யாமல் சோம்பேறிகளாக வாழும் செல்வந்தர்களும், பொருள் தேடுவதிலும் அதைக் காப்பதிலும் மிதமிஞ்சிய கவலை செலுத்தும் செல்வந்தர்களுக்கும் ஜீரண சக்தி எப்போதும் மோசமாகவே இருக்கும். அவர்களுக்கு எதுவுமே ருசிக்காது.

* வாழ்க்கையில் தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவன் பிறருக்கு அறிவுரை கூறி திருத்த அதிகாரம் பெறமாட்டான்.

* துளிகூட, ஓர் அணுகூட பிறரை ஏமாற்றுவதில்லை என்பதில் வெற்றி பெறுபவனே இறைவனாகிறான்.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us