Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/பயத்தை அகற்றும் கணபதி

பயத்தை அகற்றும் கணபதி

பயத்தை அகற்றும் கணபதி

பயத்தை அகற்றும் கணபதி

ADDED : ஜூன் 20, 2010 04:06 PM


Google News
Latest Tamil News
* மூல முதற்பொருளே! மணக்குளத்து விநாயகரே! உம் திருவடியே சரணம் என்று அடைக்கலம் கொண்டு விட்டோம். நாயினும் இழிவான நாங்கள், பல பிழைகளைச் செய்து மிகவும் களைத்திருக்கிறோம். அவற்றைப் பொறுத்துக் கொள்ளும்படி உன் ஒளி பொருந்திய மலர்ப்பாதங்களை வணங்கித் துதிக்கிறோம்.

* கேட்டதை வழங்கும் கற்பகவிநாயகரே! அருளை வாரி வழங்கும் ஆனைமுகத்தோனே! உலகம் யாவையும் படைத்தவரே! குருவே! சந்திரனைத் தலையில் சூடிய ஈசனின் மைந்தரே! உம் திருவடிகளை எங்கள் சிந்தையில் என்றும் வைப்போம்.

* உம்மை வழிபடும் எங்களுக்கு எட்டுத்திக்கும் வெற்றிக்கொடி நாட்டும் உயர்வாழ்வு வேண்டும். பகையே கூடாது. துயரில்லாத வாழ்க்கை வேண்டும். அறிவு வளர வேண்டும். வீரம் பெருக வேண்டும்.

* கருணைக்கடலே! உன்னருள் பெற்ற எங்களுக்கு அச்சம் என்பது சிறிதும் இல்லை. கடலே பொங்கி வந்தாலும் பயம் இனி இல்லை.

* வான்புகழ் பெற்ற மறைகளின் தலைவரே! எதற்கும் கலங்காத நெஞ்சுரத்தையும், எல்லாரும் இன்புற்று வாழும் வரத்தையும் அருள வேண்டும்.

-பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us