Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/உற்சாகத்துடன் இருப்போம்

உற்சாகத்துடன் இருப்போம்

உற்சாகத்துடன் இருப்போம்

உற்சாகத்துடன் இருப்போம்

ADDED : அக் 30, 2012 10:10 AM


Google News
Latest Tamil News
* நம் அறிவிலே தெய்வத்தன்மை நிறைந்துஇருக்கிறது. சிந்தனை, சொல், செயலிலும் தெய்வத்தன்மையை வெளிப்படுத்துவதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டும்.

* தெய்வத்தின் அருள் எப்போதும் நம் மீது பொழிந்து கொண்டிருக்கும் விதத்தில் உள்ளத்தை திறந்து வையுங்கள்.

* மனதை உற்சாக நிலையில் வைத்துக் கொண்டால் உடம்பில் சக்தி உண்டாகும். உடம்பில் சக்தி உண்டானால் மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். மனத்தளர்ச்சிக்கு ஒருபோதும் இடம் கொடுப்பது கூடாது.

* நம்மை அகங்காரம் என்னும் மாசு மூடியிருக்கிறது. அதை நீக்கிவிட்டால் தெய்வ ஞானம் உண்டாகும்.

* இடையறாமல் தொழில் செய்து உலகப் பெருமையை அடைய முயலுங்கள். இயலாவிட்டால் விதிவசம் என்று மகிழ்ச்சியோடு வாழுங்கள்.

* பூமி முழுவதும் அன்பும் பொறுமையும் நிறைந்து இருக்கட்டும். துன்பமும், நோயும் நீங்கட்டும். எல்லா உயிர்களும் இன்புற்று வாழட்டும்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us