Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/பக்தி அதிகரிக்கட்டும்!

பக்தி அதிகரிக்கட்டும்!

பக்தி அதிகரிக்கட்டும்!

பக்தி அதிகரிக்கட்டும்!

ADDED : ஏப் 19, 2013 05:04 PM


Google News
Latest Tamil News
* துன்பம் நேரும்போது துணிச்சல் என்னும் கடிவாளத்தால் கட்டி மனக்குதிரையைப் பிடித்து நிறுத்த வேண்டும். இதுவே சரியான யோகப்பயிற்சி.

* தனிமையை விரும்பியோ, மந்திரம் ஜெபித்தோ, யோகபயிற்சியில் ஈடுபட்டோ உலகத்தை விட்டு விலக முயற்சிக்க வேண்டாம். உலக விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டே மனதை ஒருநிலைப்படுத்துவதே பயனுடைய செயல்.

* வீட்டில் தெய்வத்தைக் காணும் திறமை இல்லாதவன், மலைச்சிகரத்திற்குச் சென்று குகையில் அமர்ந்து தவம் செய்தாலும் கடவுள் தரிசனத்தைப் பெற முடியாது.

* பக்தி அதிகரிக்க அதிகரிக்க மனோபலம் அதிகரிக்கும். அப்படிப்பட்டவன் இந்த பிறப்பிலேயே தெய்வ நிலைக்கு உயர்ந்து விடுவான்.

* கேட்டவுடன் உலகில் எதுவும் கிடைப்பதில்லை. பக்திக்கும் இது பொருந்தும். பக்குவமடைந்த பிறகே கேட்ட வரம் கிடைக்கும்.

* மற்றவர்களின் உள்ளத்தில் உங்களைப் பற்றிய பொய்யான மதிப்பு உண்டாக்க முயற்சிக்காதீர்கள்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us