Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/விதியை வெல்லும் சக்தி

விதியை வெல்லும் சக்தி

விதியை வெல்லும் சக்தி

விதியை வெல்லும் சக்தி

ADDED : மே 26, 2011 09:05 AM


Google News
Latest Tamil News
* மகாசக்தியே தாய் அல்லது மனைவி வடிவத்தில் மனிதன் உயிருக்குத் துணை புரிகிறாள். ஆதலால், பெண்ணை

அனுசரித்து வாழும் வாழ்க்கையே தேவ வாழ்க்கை.

* விதி வெற்றிக்குத் துணையாகும். விதியை நம்பி விதை போடாமலிருந்தால் பயிர் விளையாது. விதியை நம்பி உழைத்தால் பயிர் விளையும். அதேநேரம் விதியின் முடிவுகளை தெய்வபக்தி வெல்லும்.

* தர்மத்தாலும், கருணையாலும் கிடைக்கும் வெற்றியே நிலையாக நிற்கும். இதனை அறியாதவர்கள் உலக சரித்திரத்தையும் இயற்கையின் விதிகளையும் அறியாதவராகின்றனர்.

* நீயும் பிறரை ஏமாற்றக்கூடாது, பிறரும் உன்னை ஏமாற்றக்கூடாது. பிறரை ஏமாற்றுவதை நீ இயன்ற வரை தடுக்க வேண்டும். துளிகூட, ஓர் அணுகூட பிறரை ஏமாற்றுவதில்லை என்று ஒருவன் பரிபூரண சித்தி அடைந்தால் அவனே ஈஸ்வரன்.

* ஒரு முயற்சியில் இறங்கினால் வெற்றிகிடைக்கும் வரை எப்போதும் அதிலேயே கண்ணும் கருத்துமாகப் இருக்க வேண்டும். குறிப்பாக நம்பிக்கை உண்டானால் வெற்றி கிடைக்கும்.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us