Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/விதியை வெல்லும் ரகசியம்

விதியை வெல்லும் ரகசியம்

விதியை வெல்லும் ரகசியம்

விதியை வெல்லும் ரகசியம்

ADDED : ஏப் 10, 2011 02:04 PM


Google News
Latest Tamil News
* தெய்வத்தின் விருப்பப்படி உலகம் நடக்கிறது, தெய்வமே சரணம் என்று நம்பி எவன் தொழில் செய்கிறானோ, அவன் என்ன தொழில் செய்தாலும் அது நிச்சயமாகப் பயன்பெறும்.

* மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு ஒப்பாகும். உள்ளத்தில் ஒளி உண்டானால் வாக்கினில் ஒளி உண்டாகும்.

* தன்னையே எரித்துக் கொண்டு சந்நிதியில் ஒளி பரப்பும் விளக்கைப் போல், ஆயுள் உள்ளவரை ஆண்டவனுக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவை செய்ய வேண்டும்.

* தனிமையான இடத்தில் சென்று அமைதியை அளிக்கும் தூய சிந்தனைகளால் மனதை நிரப்புங்கள். அப்போது நீங்கள் தியானம் செய்வதற்கான தகுதியைப் பெறுவீர்கள்.

* விதியின் முடிவுகளைத் தெய்வ பக்தி வெல்லும். இந்த உலகம் முழுமைக்கும் ஒரே தலைவன் பரம்பொருள் மட்டுமே. பக்தி செலுத்துபவன் விதியை வெல்வான்.

* அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது. ஆனால், அன்பினால் துயரங்களை எளிதாக மாற்றிவிடலாம். அன்பு வெறும் கொள்கை அளவில் மட்டும் இல்லாமல் செயலிலும் வெளிப்பட வேண்டும்.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us