Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/வானத்தையும் கட்டலாம்

வானத்தையும் கட்டலாம்

வானத்தையும் கட்டலாம்

வானத்தையும் கட்டலாம்

ADDED : ஜூலை 19, 2012 04:07 PM


Google News
Latest Tamil News
* அன்னை பராசக்திக்கு எண்ணற்ற கோயில்கள் உண்டு. தொடக்கமும் முடிவும் இல்லாத அவள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறாள்.

* நம் உயிரினுள் பராசக்தி கொலு வீற்றிருக்கிறாள். உள்ளம் தெளிவு பெறவும், உடலில் உறுதி நிலைக்கவும் அவள் நமக்கு வரம் தருவாள்.

* சிற்றெறும்பிற்கு கூட கை,கால், வாய், வயிறு என எல்லா உறுப்புக்களையும் கணக்காய் வைத்தது மகாசக்தி அன்னை தான். அவளே மூச்சுக்காற்றாக இருந்து உயிர் விளையாட்டை இந்த மண்ணில் நிகழ்த்துகிறாள்.

* உலகம் முழுவதும் படைத்து காக்கின்ற சக்தித்தாயே! செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றியைக் கொடுக்க வேண்டும். எங்கள் வாழ்வு மேன்மைபெற வழிகாட்ட வேண்டும்.

* மண்ணிலே வேலி போடலாம். ஆனால், வானத்திலே முடியுமா? அதேநேரம் மண்ணில் கட்டினால், அதற்கு நேரே உள்ள வானத்தையும் சேர்த்துக் கட்டியதற்குச் சமம் தானே! அதைப் போல உடலைக் கட்டினால்(பாதுகாத்தால்) உயிரை நம்மால் கட்ட முடியும்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us