Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/கஷ்டம் சிறிதுகாலமே இருக்கும்

கஷ்டம் சிறிதுகாலமே இருக்கும்

கஷ்டம் சிறிதுகாலமே இருக்கும்

கஷ்டம் சிறிதுகாலமே இருக்கும்

ADDED : பிப் 13, 2011 12:02 AM


Google News
Latest Tamil News
* அனைவரும் ஒருமனப்பட்டிருப்பதுடன், இரக்கமும் சகோதர அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருக்க

வேண்டும்.

* ஒரு காலத்தில் இருளாக இருந்த நீங்கள்

இப்போது கடவுளோடு இணைந்து

ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.

* கடவுள் மனிதருக்குத் தந்துள்ள ஆவி ஒரு விளக்கு.

அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதை எல்லாம்

ஆய்ந்தறியும்.

* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்,

நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல்புரிவதுமில்லை. சிந்தனை செய்வதுமில்லை.

* என் மனத்தில் கவலைகள் பெருகும்போது,

என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது.

* உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு

உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய்

வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.

* சிறிது காலத்துன்பங்களுக்குப் பின் கடவுள் உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி, நிலை

நிறுத்துவார்.

* வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே! நீங்கள்

என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு

இளைப்பாறுதல் தருவேன்

- பைபிள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us