Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/இதுதான் மனித நீதி!

இதுதான் மனித நீதி!

இதுதான் மனித நீதி!

இதுதான் மனித நீதி!

ADDED : ஆக 21, 2011 09:08 AM


Google News
Latest Tamil News
* கடவுளை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்கள். அனைத்தும் கடவுள் செயல் என்பதே உண்மை. தெய்வபக்தி உடையவர் மற்றவர்களுக்கு உதவி செய்பவராகவே இருப்பார்.

* ஏழைகளுக்கு உதவி செய்தல் என்பது, மனிதன் செய்ய வேண்டிய உயர்ந்த கடமை. மாணவர்களுக்கு ஜீவகாருண்யத்தை கற்பிக்க வேண்டும். மாமிசம் சாப்பிடுவது தவறானது என்பதை அவர்களுக்கு பள்ளிகளிலேயே கற்றுத்தர வேண்டும்.

* சேவை செய்யாமல் அரை நொடி கூட இருக்காதீர்கள். நீங்கள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் உங்களுக்கென்று இறைவனால் தரப்பட்டிருக்கும் தொழிலை செய்து கொண்டே இருங்கள். இது தான் மனித நீதி.

* உங்கள் உள்ளமே உங்களுக்கு பகையாளனாக இருக்கிறது. உள்ளத்தில் இருக்கும் பகையை களைந்துவிட்டால், வெளியில் இருக்கும் பகை தானாகவே நீங்கிவிடும். உள்ளப்பகை நீங்க இறைவன் மீது பக்தி கொள்ள வேண்டும். அதற்கு, உள்ளத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us