Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/வெல்ல வேண்டியது எதை?

வெல்ல வேண்டியது எதை?

வெல்ல வேண்டியது எதை?

வெல்ல வேண்டியது எதை?

ADDED : ஜூன் 10, 2013 11:06 AM


Google News
Latest Tamil News
* புராணங்களைக் கேட்டுப் பயனடையுங்கள். அதற்காக, அதையே வேதங்களாக மதித்து மடமை பேசி, விலங்குகள் போல நடந்து கொள்ளாதீர்கள்.

* அன்பால் கடவுளுக்குச் செய்யப்படுவது மட்டுமல்ல. மனதைத் தீய நெறியில் செல்லவிடாமல் தடுத்து, நன்னெறியில் செலுத்தி உயர்நிலைக்கு இட்டுச் செல்வதே வழிபாடு.

* பயத்தை வென்றால், மற்ற எல்லாப் பாவங்களையும் எளிதாக வெல்லலாம். மற்ற பாவங்களைக் கொன்றுவிட்டால், தாய்ப்பாவமாகிய பயம் காணாமல் போய் விடும்.

* தனக்கோ, பிறருக்கும் துன்பம் விளைவிக்கும் செயல் அனைத்தும் பாவம். இன்பம் விளைவிப்பது அனைத்தும் புண்ணியம்.

* ஏதாவது ஒரு பாவத்தை வெல்லும் முயற்சியில் ஒரு மனிதன் கஷ்டப்பட்டு தேறி விட்டால், பிறகு மற்ற பாவங்களை வெல்வதில் சிரமம் இருக்காது.

* கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான பண்பு. ஆண்களின் அன்புத்துணையாகவும், அறிவுத்துணையாகவும் பெண்கள் விளங்க வேண்டும்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us