Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/உனக்கு நீயே நண்பன்

உனக்கு நீயே நண்பன்

உனக்கு நீயே நண்பன்

உனக்கு நீயே நண்பன்

ADDED : மார் 02, 2011 10:03 PM


Google News
Latest Tamil News
* உண்மையான தெய்வபக்தி இருந்தால் மனோதைரியம் உண்டாகும். மனோ தைரியம் இருந்தால் உண்மையான தெய்வ பக்தி உண்டாகும்.

* பிறருடைய சொத்தை அபகரிக்க வேண்டும் என்று மனதில் எண்ணிய உடனேயே திருடனாகி விடுகிறான். திருடனுக்குரிய தண்டனை அவனுக்கு மனிதர்களால் விதிக்கப்படா விட்டாலும், கடவுளால் அவசியம் விதிக்கப்படுகிறது.

*  திறமைகளைப் பயன்படுத்துவதனால் மக்களுக்கு வலிமை உண்டாகிறது.

* ஒருவன் தனக்குத்தானே நட்பாகிவிட்டால் உலகம் முழுவதும் அவனுக்கு நட்பாகிவிடுகிறது.

 * நம்முடைய விருப்பப்படி உலகம் நடப்பதில்லை, தெய்வத்தின் விருப்பப்படியே இயங்குகிறது. எனவே, உனது பணிகளை தெய்வத்திடம் ஒப்படைத்து விடு.

* உள்ளத்திலே நேர்மையும் தைரியமும் இருந்தால் கை தானாகவே நேரான எழுத்தை எழுதும். தைரியம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும், சண்டி மாடு போல ஓரிடத்தில் வந்து படுத்துக் கொள்ளும், அதன் வாலைப் பிடித்து எவ்வளவு திருகினாலும் எழுந்திருக்காது.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us