ADDED : மே 15, 2010 09:42 PM
பெஷாவர் : பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பெண்கள், குழந்தைகள் உட்பட 60 பேரை, தலிபான் ஆதரவு பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள குர்ரம் பழங்குடியினப் பகுதியில், 10 வாகனங்களில் வந்து கொண்டிருந்த பொதுமக்களை, துப்பாக்கி முனையில் சிறை பிடித்து சென்றுள்ளனர். அப்போது, டிராக்டர் ஒன்றுக்கும் தீ வைத்தனர். இதுகுறித்த முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை. எனினும், கடத்திச் சென்றவர்களைத் தேடி வருவதாக போலீசார் கூறியுள்ளனர். குர்ரம் பகுதியில் ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கு இடையில் அடிக்கடி கலவரம் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.