வேலூர் அகல ரயில் பாதை பணி இம்மாதம் முடியும் *முதன்மை கட்டுமான நிர்வாக அதிகாரி பேட்டி
வேலூர் அகல ரயில் பாதை பணி இம்மாதம் முடியும் *முதன்மை கட்டுமான நிர்வாக அதிகாரி பேட்டி
வேலூர் அகல ரயில் பாதை பணி இம்மாதம் முடியும் *முதன்மை கட்டுமான நிர்வாக அதிகாரி பேட்டி
ADDED : மே 02, 2010 01:30 AM
விழுப்புரம் : விழுப்புரம்-வேலூர் அகல ரயில் பாதைப் பணி, இம்மாத இறுதியில் முடித்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்விற்கு தயாராகும் என முதன்மை கட்டுமான நிர்வாக அதிகாரி ராமநாதன் தெரிவித்தார்.விழுப்புரம்-வேலூர் அகல ரயில் பாதைப் பணிகளை, தென்னக ரயில்வே முதன்மை நிர்வாக அதிகாரி ராமநாதன் நேற்று ஆய்வு செய்தார்.
விழுப்புரத்திலிருந்து, தனி ஆய்வு ரயில் மூலம் வேலூர் அகலப் பாதையில் ஆய்வுப் பணியை மேற்கொண்டார். முதன்மை பொறியாளர் மிஸ்ரா, உதவி பொறியாளர் முகமது சாலையா உட்பட பலர் உடனிருந்தனர். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:விழுப்புரம்-வேலூர் இடையேயான, 160 கி.மீ.,தூரத்திற்கு அகலப் பாதையில் நிறைவாக நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்கிறோம். சி.ஆர்.எஸ்., ஆய்விற்காக சில அடிப்படை பணிகளை முடிக்க சுட்டிக் காட்டியிருந்தனர். அந்தப் பணிகள் எந்தளவிற்கு முடிந்துள்ளன என்பதையும், எர்த் ஒர்க், ஸ்டேஷன் பில்டிங் பணிகளையும் பார்க்கிறோம்.முதலில் ரயில் இயக்கத் தேவையான பணிகளை முடித்தல், ரயில் இயக்கிய பிறகு பிற பணிகளை முடிப்பது என, இரு பகுதியாக பிரித்து செய்து வருகிறோம். சிக்னல், லெவல் கிராசிங்குகளை ஆய்வு செய்கிறோம். இவை அனைத்தும் இம்மாத இறுதியில் முடிக்கப்படும். பின் சி.ஆர்.எஸ்., ஆய்வு செய்து அனுமதித்தவுடன் ரயில்கள் இயக்கப்படும்.அகல பாதை பணி 500 கோடி ரூபாயில் நடக்கிறது. இதில் காட்பாடி வேலூர் இடையே பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தற்போது மின் பாதையில் ரயில் இயக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது. 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு மின் பாதை அமைக்கும் பணிகள் நடக்க உள்ளது. இரண்டாண்டில் மின் பாதை தயாராகி விடும்.புதுச்சேரி மார்க்கத்தில் புதிய ரயில்கள் இயக்க செங்கல்பட்டு-விழுப்புரம் இரட்டை அகலப்பாதை முடிக்க வேண்டும். கூடுதலாக ஐந்து ரயில் விட்டாலே நெருக்கடியாகி விடுகிறது. இதனால், புதிய ரயில்கள் விடுவதில் சிக்கல் நீடிக்கிறது. நாட்டிலேயே 2 கோச் பேக்டரி தான் உள்ளது. இதனால் ரயில் பெட்டிகள் தயாராவதும் தாமதமாகிறது. விழுப்புரம்-புதுச்சேரிக்கு மட்டும் ரயில்கள் விடலாம். அதற்கு எம்.பி.,க்கள் கோரிக்கை வைத்தால் முடியும். விழுப்புரம் -வேலூர் மார்க்கத்தில் பணிகள் முடிந்தால் அந்த மார்க்கத்தில் தென்மாவட்டங்களுக்கு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, முதன்மை கட்டுமான நிர்வாக அதிகாரி ராமநாதன் கூறினார்.