Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/நானே உலகின் ஒளி

நானே உலகின் ஒளி

நானே உலகின் ஒளி

நானே உலகின் ஒளி

ADDED : டிச 20, 2011 09:12 AM


Google News
Latest Tamil News
* ஜீவ அப்பம் நானே. என்னிடத்தில் வருகிறவன் ஒருகாலமும் பசியடையான். விசுவாசமாயிருக்கிறவன் ஒருகாலமும் தாகமடையான்.

* இருக்கிறவரும், இருந்தவரும், மீண்டும் வருகிறவருமாகிய சர்வ வல்லவராகிய நான், ஆதியும், அந்தமும், முந்தினவரும், பிந்தினவருமாயிருக்கிறேன்.

* இரண்டு பேர் மூன்று பேர் என் பெயரால் எங்கே கூடி இருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் நான் இருக்கிறேன். நான் உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டேன்.

* நானே, வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னைக் கண்டவன் கடவுளை கண்டவன். நானும் கடவுளும் ஒன்றாக இருக்கிறோம்.

* நான் உலகின் ஒளியாயிருக்கிறேன். நான் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்.

* வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதலையும், சமாதானத்தையும் தருவேன்.

- இயேசுநாதர்
இன்று கிறிஸ்துமஸ்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us