Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/நேரம் விரயமானால்...

நேரம் விரயமானால்...

நேரம் விரயமானால்...

நேரம் விரயமானால்...

ADDED : மார் 02, 2011 10:03 PM


Google News
Latest Tamil News
* கடவுளுக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே, நீங்கள் அனைவரும் உள்ளத்தில் உறுதி கொண்டிருங்கள்.

* ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது கடவுளோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாய் வாழுங்கள்.

* இறைப்பற்றோடு சகோதர நேயமும், சகோதர நேயத்தோடு அன்பும் கொண்டு விளங்குமாறு முழு ஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள்.

* நீங்கள் மேற்கொண்டுள்ள தொழிலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது.

* பணத்தை விரயம் செய்கிறவர்கள் செல்வத்தை மட்டுமே இழக்கிறார்கள், ஆனால், நேரத்தை விரயம் செய்கிறவர்கள் வாழ்க்கையை இழக்கிறார்கள்.

* வஞ்சித்துப் பெறும் உணவு சுவையாயிருக்கும்; ஆனால், பின்னால் அது வாய் நிறைய மணல் கொட்டியது போலாகும்.

* முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி, ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முழு முயற்சியுடன் செயல்படுங்கள்.

- பைபிள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us