Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/நன்மை மட்டுமே செய்யும் அன்பு

நன்மை மட்டுமே செய்யும் அன்பு

நன்மை மட்டுமே செய்யும் அன்பு

நன்மை மட்டுமே செய்யும் அன்பு

ADDED : அக் 20, 2011 03:10 PM


Google News
Latest Tamil News
* மலைகளை இடம் பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை.

* அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது.

* அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.

* நீங்கள் அறிவிலும், அனைத்தையும் உணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுங்கள்.

* அன்பர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.

* நாம் கடவுளின் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதினால் அல்ல. மாறாக அவர் நம் மீது அன்பு கொண்டு தம் மகனை நமது பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில் தான் அன்பின் தன்மை விளங்குகிறது.

- பைபிள் பொன்மொழி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us