Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/பொறுமையுடன் காத்திருங்கள்

பொறுமையுடன் காத்திருங்கள்

பொறுமையுடன் காத்திருங்கள்

பொறுமையுடன் காத்திருங்கள்

ADDED : ஜன 30, 2012 02:01 PM


Google News
Latest Tamil News
* அடிமையேயாயினும், உரிமைக் குடிமகனாயினும், நன்மை செய்யும் ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து நன்மையே பெறுவர்.

* பயிரிடுபவரைப் பாருங்கள், அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியும் வரை பொறுமையோடு காத்திருக்கிறார்.

* கடவுளின் செயலுக்காக நான் மவுனமாகக் காத்திருக்கிறேன்; எனக்கு மீட்பு கிடைப்பது அவரிடமிருந்தே.

* வாழ்வு அளிக்கும் நீருற்றுகளுக்கு வழி நடத்திச் செல்லும் கடவுள், அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.

* சிற்றலைகளும், பேரலைகளும் என் மீது புரண்டோடுகின்றன. நாள்தோறும் கடவுள் தம் பேரன்பைப் பொழிகின்றார்.

* நாங்கள் கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால், பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது.

* தேவையில் உழல்வோருக்குப் பகிர்ந்து கொடுக்க, தங்களிடம் பொருள் இருக்கும் வகையில் நேர்மையோடு பாடுபட்டு உழைக்கட்டும்.

- பைபிள் பொன்மொழிகள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us