Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சின்மயானந்தர்/அன்பை வாரி வழங்குவோமே!

அன்பை வாரி வழங்குவோமே!

அன்பை வாரி வழங்குவோமே!

அன்பை வாரி வழங்குவோமே!

ADDED : செப் 20, 2013 10:09 AM


Google News
Latest Tamil News
* பிறருக்கு கொடுத்தால் வறுமை வந்து விடும் என்று நினைப்பவர்கள் அன்பைக் கூட கொடுக்கத் தயங்குகின்றனர்.

* அன்பை வாரி வழங்குவதால் வாழ்வு வளமாகும் என்ற அடிப்படையை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்.

* அன்பைக் கொடுப்பதால் மனம் விரிவடைகிறது. அன்பை பிறருக்குக் கொடுப்பவனே சுதந்திரமானவன்.

* உள்ளத்தில் அன்பு இருந்தால் உலகமே புனிதமாகி விடும். அவன் காண்பதெல்லாம் தெய்வீகமாகி விடும்.

* அன்பு செலுத்தப் பழகி விட்டால் மனோசக்தி அதிகரிக்கும். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் அதன் அழகு வெளிப்படத் தொடங்கும்.

* நீர் ஊற்றினால் செடி வளர்வது போல, துன்பத்தில் கை கொடுத்து உதவும் போது அன்பு வெளிப்படுகிறது.

* அன்பு ஒன்றே வெற்றியைத் தரும் சக்தி மிக்க ஆயுதம். அதை எதிர்த்து நின்றவர்கள் யாரும் வெற்றி பெற்றது கிடையாது.

- சின்மயானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us