Dinamalar-Logo
Dinamalar Logo

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சின்மயானந்தர்/புராணக்கதை ரகசியம்

புராணக்கதை ரகசியம்

புராணக்கதை ரகசியம்

புராணக்கதை ரகசியம்

ADDED : நவ 15, 2009 01:46 PM

Google News
Latest Tamil News

'புராணக்கதைகள் எதற்கு? நேரடியாகப் புராணம் கூறும் தத்துவத்தை சொன்னால் என்ன?' என்று நமக்கு சந்தேகம் வரலாம். அப்படி தத்துவங்களை சொன்னால் நம்மால் ஜீரணிக்க முடியாது. அம்மா சப்பாத்தி செய்ய மாவு பிசைகிறாள். குழந்தை அருகில் இருந்து பார்க்கிறது. மாவுடன் தண்ணீர் சேர்த்து பிசைந்து, வட்டமாகத் தேய்க்கிறாள். பின் அடுப்பில் ஏற்றி சூடாக் கினால் பதமான ரொட்டி கிடைத்து விடுகிறது. குழந்தை தனது அம்மாவிடம், ''அம்மா! எதற்காக இவ்வளவு சிரமப்படுகிறாய்? என் வயிற்றில் போக வேண்டியது இந்த மாவு தானே! ரொட்டிக்கு மூலம் இந்த மாவுதானே! பேசாமல் மாவைச் சாப்பிட்டால் போதாதா? காரியம் முடிந்து விடுமே! என்று கேட்டான்.
அம்மா குழந்தையிடம்,''கண்ணா! மாவைச் சாப்பிட்டால் உனக்கு ஜீரணம் ஆகாது!'' என்பாள். அதுமட்டுமல்ல. சப்பாத்திக்கான குருமாவும் வைத்து கதை சொல்லி, உணவைச் சாப்பிடச் செய்வாள்.
இதைத்தான் நம் பெரியவர்களும் செய்திருக்கிறார்கள். பெரிய தத்துவங்களை எளிதாக்கி நாம் ஜீரணிக்கும் பதத்தில் சுவையாகவும், விளையாட்டுப் போக்கில் நம்முள் செலுத்த வேண்டும் என்ற தாயுணர்வுடன் புராணக்கதைகளை நமக்குத் தந்திருக்கிறார்கள்.
-சின்மயானந்தர்

Our Apps Available On

Dinamalar

Follow us