ADDED : ஏப் 19, 2013 05:04 PM

* சுவரில் எறியும் பந்து மீண்டும் நம்மிடமே திரும்பிவிடும். அதுபோல, கோபத்தில் பிறரைத் தாக்கினால், அது மீண்டும் வந்து நம்மைத் தாக்கும்.
* உங்களது ஆசைகள் நிறைவேறத் தடையாக இருப்பவர்கள் மீதும், உ<ங்களுக்குக் கீழே பணியாற்றுபவர்கள் மீதும் ஒருபோதும் கோபத்தைக் காட்டாதீர்கள்.
* ஒருவரின் நிறைவேறாத ஆசையே கோபம் அல்லது வருத்தமாக வெளிப்படுகிறது. இதில் வருத்தத்தை விட, கோபத்தால் நமக்கும் பிறருக்கும் பெரிய அளவில் துன்பம் உண்டாகிறது.
* யாரையும் கோபிக்கும் தகுதியோ உரிமையோ நமக்கு இல்லை. நாமும் பல சந்தர்ப்பங்களில் தவறு செய்திருக்கிறோம். இது நம் மனசாட்சிக்கு தெரியும்.
* பலவிதமான தீங்குகளில் தள்ளிவிடும் மோசமான எதிரி கோபம். அது நம்மை அண்டாதபடி விழிப்புடன் இருப்பது அவசியம்.
* கோபம் எதிராளியை மாற்றுவதில்லை. மாறாக இருவருக்கும் இடையே வெறுப்பையும், துன்பத்தையும் உண்டாக்குகிறது.
- காஞ்சிப்பெரியவர்