Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/அன்பினால் திருத்துங்கள்

அன்பினால் திருத்துங்கள்

அன்பினால் திருத்துங்கள்

அன்பினால் திருத்துங்கள்

ADDED : ஜூலை 19, 2013 10:07 AM


Google News
Latest Tamil News
* அன்பு செலுத்தாமல் வாழ்வதில் மகிழ்ச்சியே இல்லை. அன்பில் இருக்கும் ஆனந்தம் போல, வேறெதிலும் இல்லை.

* அன்பினால் ஒருவரைத் திருத்துவது தான் நிலைக்கும். கண்டித்துத் திருத்துவதில் பெருமை இல்லை.

* உடல் சுகத்திற்காகவும், மன சந்தோஷத்திற்காகவும் எதை வேண்டுமானாலும் செய்வது, பேசுவது, உண்பது என்று இருக்கக்கூடாது. புத்தியைப் பயன்படுத்தி மனதைக் கட்டுப்படுத்துங்கள்.

* இன்று நாம் அனுபவிக்கும் சுகம், துக்கம் எல்லாமே நாம் முற்பிறவியில் செய்த நன்மைக்கும் தீமைக்கும் கிடைத்த பலன் தான்.

* கடவுள் இல்லை என்று நிந்தித்தாலும் அதுவும் கடவுளைச் சிந்திப்பது போலத் தான். அதனால் தான், அவர் தன்னை நிந்தித்தவர்க்கும் தரிசனம் தந்து விடுகிறார்.

* கடவுளிடம் புதிதாக நாம் ஒன்றும் கேட்டுப் பெற வேண்டியதில்லை. நம்முடைய உண்மையான நிலையே ஆனந்தமயம் தான். அதை மனதால் மறைத்து கொண்டு நாம் தான் துக்கப்படுகிறோம்

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us