Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/மனச்சமநிலை வேண்டும்

மனச்சமநிலை வேண்டும்

மனச்சமநிலை வேண்டும்

மனச்சமநிலை வேண்டும்

ADDED : ஜூன் 10, 2013 11:06 AM


Google News
Latest Tamil News
* அன்பால் பிறரைத் திருத்தி நல்வழிப்படுத்த முடியும். அன்பால் ஒருவரை திருத்தினாலும் கூட அது பெருமை தரும் விஷயம் தான்.

* பாவ புண்ணியம் என்பது செயலைப் பொறுத்தது அல்ல. செயலாற்றுபவரின் நோக்கத்தைப் பொறுத்தது. நற்செயலாக இருந்தாலும் நோக்கம் தவறானதாக இருந்தால் அது பாவக்கணக்கில் தான் சேரும்.

* ஆசை, கோபம், துவேஷம், பயம் ஆகிய தீயசிந்தனைகளை மனதை விட்டு அடியோடு அகற்ற வேண்டும். உயர்வு தரும் நல்ல சிந்தனைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

* ஒருபோதும் விருப்பு வெறுப்புடன் செயலாற்றுவது கூடாது. மனச் சமநிலையுடன் செயலாற்றும் போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அகந்தையுணர்வு இல்லாமல் மனிதன் கடமைகளைச் செய்யவேண்டும்.

* அறியாமை என்பது வியாதிக்குச் சமமானது. அறியாமை நம்மிடம் இருக்கும் வரை மகிழ்ச்சி உண்டாகாது.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us