/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வேலூர் காங்.,எம்.எல்.ஏ., விபத்தில் காயம்வேலூர் காங்.,எம்.எல்.ஏ., விபத்தில் காயம்
வேலூர் காங்.,எம்.எல்.ஏ., விபத்தில் காயம்
வேலூர் காங்.,எம்.எல்.ஏ., விபத்தில் காயம்
வேலூர் காங்.,எம்.எல்.ஏ., விபத்தில் காயம்
தர்மபுரி: தர்மபுரி அருகே நேற்று காலை காரும், மினி லாரியும் மோதியதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., உள்ளிட்ட எட்டு பேர் காயம் அடைந்தனர்.
நேற்று முன்தினம் இரவு உடையாப்பட்டியில் இருந்து புதுப்பெண் சுகுணா மற்றும் உறவினர்கள் மினி லாரியில் தர்மபுரி நோக்கி வந்து கொண்டிருந்தனர். வேலூரில் இருந்து கோவை நோக்கி வேலூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஞானசேகரன், "டாடா சபாரி' காரில் வந்து கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 12 மணி அளவில் தொப்பூர் அடுத்த சனிசந்தை அருகே மினி லாரியும், காரும் வந்த போது, திடீரென மோதி கொண்டது. இதில், எம்.எல்.ஏ., ஞானசேகரன், மினி லாரியில் வந்த புதுப்பெண் சுகுணா, டிரைவர் சின்னபையன், தேன்மொழி (16), ரீனா (17), முனுசாமி (51), மணிகண்டன் (15), அமுதவள்ளி (27) ஆகிய எட்டு பேர் லேசான காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். நேற்று காலையில் ஞானசேகரன் சிகிச்சைக்கு பின், வேலூர் புறப்பட்டு சென்றார். எம்.எல்.ஏ., ஞானசேகரன் சி.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். மணமகள் உள்ளிட்டோர் சிகிச்சை முடித்து திரும்பினர். நேற்று காலை மணபெண் சுகுணாவுக்கு திருமணம் நடந்தது. தொப்பூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.