Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாவீரர்/நல்லதையே பேசுங்கள்

நல்லதையே பேசுங்கள்

நல்லதையே பேசுங்கள்

நல்லதையே பேசுங்கள்

ADDED : ஜூலை 09, 2012 04:07 PM


Google News
Latest Tamil News
* பேராசை கொண்டவனுக்கு இந்த உலகம் முழுவதையும் கொடுத்தால் கூட திருப்தி உண்டாவதில்லை. பயமும், பகையும் அவனிடம் வளர்ந்து கொண்டே போகும்.

* அன்பு சந்திர மண்டலத்தைக் காட்டிலும் குளிர்ச்சி மிக்கது. சூரிய மண்டலத்தைக் காட்டிலும் ஒளிஉடையது.

* தேவைக்கு மேல் சேமித்து வைக்கக்கூடாது. பொருள் மீது கொள்ளும் ஆசையால் மனதில் தீய எண்ணங்கள் வளரும்.

* பொறுமை, நேர்மை, உண்மை, தூய்மை, கருணை, ஒழுக்கம், தவம், ஆகிய நற்பண்புகளே வாழ்வின் அடிப்படை குணங்களாக இருக்க வேண்டும்.

* கசப்பான மருந்து நோயைப் போக்கி குணம் அளிப்பது போல, நல்ல விஷயங்களை வலிந்து ஏற்று கொண்டால் நன்மை விளைவது உறுதி.

* பிறர் உள்ளம் வருந்தும் கொடிய சொற்களை மறந்தும் பேசுதல் கூடாது. பேசுவதாக இருந்தால் நன்மை தரும் இனிய சொற்களை பேசுங்கள்.

* யாருக்கும் எப்போதும் தீமை செய்வதில்லை என்ற உறுதி தோன்றி விட்டால் அமைதி நிலைத்திருக்கும்.

- மகாவீரர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us