Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/முரளீதர சுவாமி/அவனின்றி அணுவும் அசையாது

அவனின்றி அணுவும் அசையாது

அவனின்றி அணுவும் அசையாது

அவனின்றி அணுவும் அசையாது

ADDED : அக் 18, 2008 10:32 AM


Google News
Latest Tamil News
<P>* நன்மை நடக்கும்போது மகிழ்பவர்கள், தீமை நிகழும் போது இறைவன் இருக்கிறானா என சந்தேகிக் கின்றனர். 'இறைவன் எப்படி இவ்வாறு தவறு நடக்க அனுமதிக்கிறார்?' என சந்தேகத்துடன் கேள்வியும் எழுப்புகின்றனர். உண்மையில் உலகில் நன்மை, தீமையென்று எதுவுமே கிடையாது. இன்று நன்மையாக தெரிவது, நாளை தீய செயலாகவும், இப்போது தீமையாக தெரிவது சிலகாலம் கழித்து நல்லதாகவும் தெரியும். உலகில் நடக்கும் எந்த சிறிய செயலும் இறைவனுக்கு தெரிந் தேதான் நடக் கிறது. அவருக்கு தெரியாமல் எதுவும் இம்மியளவுகூட அசைவதில்லை. இயற்கையாக நிகழும் செயலை, நமது சிறிய அறிவிற்கு ஏற்றவகையில் நல்லது என்றும், தீயது என்றும் பிரிவுபடுத்திப் பார்க்கிறோம்.<BR>

<P>* நாம் காணும் ஒவ்வொன்றும் நமது உள்ளத்தை பொறுத்தே அமைகிறது. மனம் நல்லதை நினைக்கும்போது, பார்க்கப்படுவது தீமையானதாக இருந்தாலும், அதிலுள்ள நன்மை மட்டுமே தெரியும். அதேசமயம் மனம் தீயவற்றை எண்ணி கொண்டிருக்கும்போது, நல்லவற்றை பார்த்தாலும் தீமையாகவே தெரியும். மொத்தத்தில் அனைத்தும் உங்களது உள் பார்வைக்கு ஏற்பவே தெரிகிறது. அனைத்தும் நன்மையாகவே நடக்க வேண்டுமென விரும்பினால், முதலில் மனதை நல்லதாக வைத்துக் கொள்ளுங்கள்.</P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us