Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/விதியை மாற்ற முடியும்!

விதியை மாற்ற முடியும்!

விதியை மாற்ற முடியும்!

விதியை மாற்ற முடியும்!

ADDED : ஜூன் 21, 2013 10:06 AM


Google News
Latest Tamil News
* ஒருவரைப் பார்த்து ஒருவர் பொறாமை கொள்ள வேண்டாம். ஒருவனுடைய நட்பை மற்றொருவர் துண்டித்துக் கொள்ள வேண்டாம்.

* போதுமென்ற மனப்பான்மை உள்ளவனாக இரு. மக்களில் நீயே நன்றியுள்ளவன்.

* ஒரு காரியத்தை நீர் செய்ய விரும்பினால், அதன் முடிவை எண்ணிப்பாரும். உம் சிந்தனையில் அதன் முடிவு நல்லதாக இருந்தால் அதைச் செய்வீர். இல்லையேல் அதை விட்டு விடும்.

* வெட்கம் நன்மைகளை இழுத்துவரும். உனக்கு வெட்கம் இல்லையாயின் உனது இஷ்டம் போல் நடந்து கொள்.

* பழித்துரைத்தல், ஒழுக்கம் கெட்ட முரட்டுத்தனமான பேச்சுக்கள் ஆகிய இரண்டும் நயவஞ்சகத்தின் இரு கிளைகளாகும்.

* பிரார்த்தனையைத் தவிர வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது.

* எவர் ஒருவர் இறைவனிடத்தில் தேவையானதைக் கேட்கவில்லையோ அவர் மீது இறைவன் கோபம் அடைகிறான்.

- நபிகள் நாயகம்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us