Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/கணக்கு தயாராக இருக்கிறதா

கணக்கு தயாராக இருக்கிறதா

கணக்கு தயாராக இருக்கிறதா

கணக்கு தயாராக இருக்கிறதா

ADDED : நவ 07, 2011 10:11 AM


Google News
Latest Tamil News
* எவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றி, தீவினையிலிருந்து விலகிக் கொள்கின்றாரோ அவரே இறைவனின் நேசத்திற்குரியவராவார்.

*இறைவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காக படைத்தான், உங்கள் நலனுக்காக இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளான்.

* உங்களுடைய செயல்கள் குறித்து திண்ணமாக (மறுமையில்) கேள்வி கணக்கு கேட்கப்படும்... திண்ணமாக, இறைவன் விரைவாய்க் கணக்கு வாங்குபவனாவான்.

* அசத்தியத்தைக் கொண்டு சத்தியத்தைக் குழப்பி விடாதீர்கள். அறிந்து கொண்டே சத்தியத்தை நீங்கள் மூடி மறைக்காதீர்கள்.

* இறைவனைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் மறைவான உண்மைகளை அறியமாட்டார்.

* 'நான் நாடுகின்றவர்களுக்கு தண்டனை அளிப்பேன், ஆயினும் என்னுடைய அருள் அனைத்தையும் சூழ்ந்திருக்கின்றது.

- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து





      Our Apps Available On




      Dinamalar

      Follow us