Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/இறைவன் பக்கம் திரும்புங்கள்

இறைவன் பக்கம் திரும்புங்கள்

இறைவன் பக்கம் திரும்புங்கள்

இறைவன் பக்கம் திரும்புங்கள்

ADDED : செப் 13, 2011 04:09 PM


Google News
Latest Tamil News
* இறைவனின் கருணை பற்றி நம்பிக்கை இழந்து விடாதீர்கள். திண்ணமாக இறைவன் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும், கருணையாளனும் ஆவான். திரும்பி விடுங்கள் உங்கள் இறைவனின் பக்கம்!

* உங்களின் இறைவன் கருணை பொழிவதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டுள்ளான். உங்களில் எவரேனும் அறியாமையால் ஒரு தவறைச் செய்து விட்டு பின்னர் அதற்காக மன்னிப்புக்கோரி, மேலும் தன்னைத் திருத்திக் கொண்டால், திண்ணமாக இறைவன் (அவரை) மன்னித்து விடுகிறான். மேலும் அவருடன் இரக்கத்தோடு நடந்து கொள்கின்றான்.

* இறைவன் தன் அடியார் மீது தெளிவான வசனங்களை இறக்கி கொண்டிருக்கிறான். உங்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக உண்மை யாதெனில், இறைவன் உங்கள் மீது பரிவும் கருணையும் கொண்டவனாயிருக்கின்றான்.

- குர்ஆன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us