Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/இறைவழிபாடு ஒரு பயிற்சி

இறைவழிபாடு ஒரு பயிற்சி

இறைவழிபாடு ஒரு பயிற்சி

இறைவழிபாடு ஒரு பயிற்சி

ADDED : ஜன 10, 2012 11:01 AM


Google News
Latest Tamil News
* இறைவன் அனைவருக்கும் நெருக்கமானவன். எவர் பரிந்துரையுமின்றி அவனை நேராக நெருங்க முடியும். அவனிடம் உதவி கோர முடியும்.

* எவர் தன் இறைவனின் சந்திப்பை எதிர்பார்த்தவராய் இருக்கின்றாரோ, அவர் நற்செயல்புரியட்டும். அடிபணிவதில் தன் இறைவனுடன் யாரையும் இணை வைக்காதிருக்கட்டும்.

* உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கின்றது (அதன் மூலம்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாய்த் திகழக்கூடும்.

* இறைவழிபாடுகள் சடங்குகள் அல்ல, இறையச்சம், ஒழுக்கம் ஆகியவற்றை அடைவதற்கான பயிற்சிகளே அவை.

* சேமிப்பில் நிர்ணயிக்கப்பட்ட ஒரு பகுதியை தான தர்மமாக கட்டாயம் வழங்க வேண்டும். ''ஜகாத்'' என்று அழைக்கப்படும் இக்கடமை தொழுகைக்கு அடுத்த கடமையாகும்.

* எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ தான் எல்லாவற்றையும் செவியேற்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய். உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம்.

- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து





      Our Apps Available On




      Dinamalar

      Follow us