Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/உன்னை முதலில் திருத்திக் கொள்

உன்னை முதலில் திருத்திக் கொள்

உன்னை முதலில் திருத்திக் கொள்

உன்னை முதலில் திருத்திக் கொள்

ADDED : ஆக 09, 2008 11:19 AM


Google News
Latest Tamil News
<P>ஒரு மனிதன் தன் மனம், மொழி, மெய்களால் தம்மால் இயன்ற நன்மைகளைத் தான் சார்ந்திருக்கும் சமுதாயத்திற்குச் செய்ய கடமைப் பட்டவனாக இருக்கிறான். தனக்கு நன்மை செய்வதோடு பிறருக்கும் நன்மை செய்ய கடமைப்பட்டவனாகவே அவன் இருக்கிறான். மரணத்திற்கும், மறுபிறவிக்கும் இடைப்பட்ட காலம் நீண்டதாகவோ அல்லது குறைந்ததாகவோ இருக்கலாம். ஆனால் தெளிந்த ஞானம் உள்ள ஒருவன் இதனால் எந்த மாற்றமும் பெறுவதில்லை. முதலில் உன்னைத் திருத்திக் கொள். அப்படி ஒவ்வொருவரும் தானே திருந்துவதற்கு முற்பட்டால் சமுதாயம் தானே திருந்திவிடும். மனிதன் சமயநம்பிக்கை கொண்டவனாக இருத்தல் அவசியம். சமயநம்பிக்கை இல்லாத மனிதன் வாழ்வில் ஒழுக்கத்தை இழந்து விடுவான். மனிதன் நல்லவனாக வாழ சமயமே வழிவகை செய்கிறது. அமைதியான தூய நிலையில் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் நற்செயல்களாகும். கலங்கிய மனத்தால் ஆசை வயப்பட்டு செய்யும் அனைத்து செயல்களும் தீமை தருவதாகும். இறைவனின் கட்டளையன்றி எதுவுமே நடப்பதில்லை. இந்த வாழ்வில் ஒருவனுடைய நடத்தைகள் அனைத்துமே அவனுடைய முற்பிறப்பின் வினைப்பயன்களாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன.</P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us