Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/சாந்தமுள்ளவனே தைரியசாலி

சாந்தமுள்ளவனே தைரியசாலி

சாந்தமுள்ளவனே தைரியசாலி

சாந்தமுள்ளவனே தைரியசாலி

ADDED : டிச 13, 2007 09:46 PM


Google News
Latest Tamil News
சாந்தமுடையவன் உலகத்தில் தலையிடுவது இவ்வுலகிலுள்ள கோணலை நிமிர்த்தவேயாம். அவனே இவ்வுலகத்தைக் கண்டு அஞ்சுவானாகில் இவ்வுலகத்தை ஒரு பொருளாகக் கொண்டு எனக்கு, உனக்கு என்று போராடுகிறவர்கள் எப்படி உலகத்தைச் சீர்திருத்துவர்?

குருடர்களை வழி நடத்துபவனும், அவர்களுக்கு வைத்தியம் செய்பவனும் கண்ணுள்ளவனல்லவா? அதுபோல, இவ்வுலக இயல்பை உணர்ந்து பரம சாந்தத்தை அடைந்தவர்களே, இவ்வுலகின் நன்மைக்குப் பாடுபடும் கடமை பூண்டவர்கள். அவ்வாறு நன்மை செய்யாமலிருக்க அவர்களால் முடியாது; * ஒரு குழந்தை தவறிக் கீழே விழும் சமயத்தில் அதைத் தூக்காமலிருக்க எந்தக் கல்நெஞ்சு உள்ளவனால்தான் முடியும்! அதுபோல, உலகத்தாரின் துன்பத்தை உள்ளபடி உணரும் ஞானக்கண் பெற்றவரன்றி, இவ்வுலகத்தாரை ஆதரிப்பார் யார்? ஆதலின், ஒருவன் இறந்த பிறகு அவன் பிணத்தில் எத்தனை வண்டிகள் ஏறிச் சென்றாலும் அந்த உயிருக்கு எப்படி அதில் வருத்தமில்லையோ, அதுபோல, 'நமதல்ல' என்று ஒதுங்கிய இந்த உடலும் உள்ளமும் இந்த உலகத்தாரின் உபகாரத்தின் பொருட்டு எவ்வளவு வருந்தினாலும், அதில், அவ்வுடம்புக்கும் உள்ளத்துக்கும் உரியவனாகிய ஞானிக்குச் சிறிதும் கவலையில்லை. அவன் உழைப்புக்கு அஞ்சான். துன்பத்துக்கும் அஞ்சான். இவ்வளவு தைரியத்தையும் குளிர்ச்சியையும் கொடுப்பது, உண்மையுணர்ச்சியாகிய சாந்தம்.

சாந்தம் என்பது பார்த்தால் ஏழை போல் இருக்கும்; அதாவது சக்தி அற்றதுபோல் இருக்கும். அது செய்யும் வேலை எதுவும் செய்யாது. அதற்கு உள்ள பிடிவாதமும் தைரியமும் எதற்கும் இருக்காது. சர்வ சித்திகளும் இதனாலே அடையப்படுவனவாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us