Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாரதாதேவியார்/கடவுள் நமக்கு உறவினர்

கடவுள் நமக்கு உறவினர்

கடவுள் நமக்கு உறவினர்

கடவுள் நமக்கு உறவினர்

ADDED : டிச 22, 2010 01:12 AM


Google News
Latest Tamil News
* ஏதோ ஒரு நினைவுடன் கோடிக்கணக்கில் நாம ஜபம் செய்வதைவிட, இறைவனின் நினைவில் ஊறி ஒருமுறை நாம ஜபம்

செய்வது கோடிக்கணக்கில் செய்ததற்கு

சமமாகும்.

* இறை வழிபாட்டுக்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். கடமையின் சுமை

எவ்வளவு அழுத்தினாலும் இறைவழிபாட்டைத்

தவறாமல் ஒழுங்காகச் செய்ய வேண்டும்.

* இறைவனின் செயல்படி அனைத்தும் நடந்தாலும்,

நம்முடைய வேலையை நாம் தான் செய்தாக வேண்டும். காரணம், இறைவனின் திருவுளம் மனிதனின் செயல் மூலமே வெளிப்படுகிறது.

* இறைவன் அனைவருக்கும் உரியவர். இறை

நாமத்தைக் கணக்கிட்டு ஜபித்து அதன் மூலம் புனிதம் அடைவதற்காகவே இறைவன் நமக்கு விரல்களைத்

தந்துள்ளான்.

* கடவுள் நமக்கு மிகவும் நெருங்கிய உறவுக்காரர். இந்த உறவு எவ்வளவு ஆழமாக ஒருவனுக்கு இறைவனிடம் இருக்கிறதோ, அவ்வளவு தூரம் அவன் அவரை

நெருங்குகிறான்.

- சாரதாதேவியார்

(இன்று அன்னை சாரதாதேவியார் அவதார தினம்)




      Our Apps Available On




      Dinamalar

      Follow us