Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

PUBLISHED ON : மே 09, 2010 12:00 AM


Google News

"நம்பிக்கை இருக்கு...!' மாற்றுத் திறனாளிகளுக்கான படம் எடுக் கும் மாற்றுத் திறனாளி பாத்திமா: திருப்பரங் குன்றம் தான் என் சொந்த ஊர்.

அக்கா, இரண்டு அண்ணன்கள், நான் ஒரு தங்கச்சி; இது தான் எங்க குடும்பம். சின்ன வயசில் போலியோவால் பாதிக்கப்பட்டேன். இருந்தாலும், இயல்பிலேயே இலக்கியம், விளையாட்டு, மேடைப்பேச்சு, எழுத்துன்னு இப்படி எல்லாத்திலும் எனக்கு ஆர்வமும் அறிவும் இருந்ததால, திருப்பரங் குன்றத்துல நடக்கற எல்லா நிகழ்ச்சிகள்லயும் கலந்துக்குவேன். எங்க அம்மா, அக்கா இடுப்பும், என் சகோதரர்கள் மற்றும் நண்பர்களின் தோள்களும் தான், என் வாகனம். பாரதியிலிருந்து, டால்ஸ்டாய் வரை எல்லாரது எழுத்துக்களையும் படிக்கும் போது, நாமும் ஏதாவது சாதிக்கணும்னு தீர்மானிச்சேன். என் தேடலுக்குத் தீனியா கவிதை, ஓவியம்ன்னு எல்லாத்திலும் ஆர்வமா ஈடுபட்டு சர்வதேச அளவுல பரிசு வாங்கினேன். பி.காம்., முடிச்சதும் ரேடியோ, "டிவி' தொகுப்பாளரா கொஞ்ச நாள் வேலை பார்த் துட்டு இருந்தேன். அப்போது எழுத் தாளர் சங்கத்துல நான் பார்த்த குறும்படங்கள் என்னை ரொம்பவே ரசிக்க வைக்க, எனக்கும் பிலிம்மேக்கிங் ஆசை வந்தது. திப்பு சுல்தான் பத்தி ஒரு ஆவணப் படம் எடுக்கத் திட்டமிட்டு, பல முயற்சிகள் எடுத்தும் முழுமையா தகவல்களை திரட்ட முடியாததால், அதைத் தொடர முடியல. அரசு திரைப்படக் கல்லூரியின் துணைத் தலைவர் மற்றும் பேராசிரியர் மதன் கேப்ரியல், என்னைப் போல் மாற்றுத் திறன் கொண்ட நூற்றுக்கணக்கானோரை ஒருங்கிணைச்சு நடத்தின, பல திறனறிவு போட்டிகள்ல கலந்துக்கற வாய்ப்பு கிடைச்சது. அதுல முதல் பரிசு வாங்கினேன். என் ஆர்வத் தை கவனிச்ச கேப்ரியல், என்னை பிலிம் ஸ்கூல்ல சேர்த்தார். அங்கு எடிட்டிங், இசைன்னு அனைத் தையும் படிச்சு இப்ப மாற்றுத்திறன் கொண்ட இளைஞனைப் பத்தி திரைப்படம் எடுக்கிறேன். நிச்சயமா ஜெயிப்பேன்னு நம்பிக்கை இருக்கு.



என் தோட்டம் தான் மெடிக்கல் ஷாப்: வீட்டில் தோட்டம் வைத்து பராமரிக்கும் அருள் மொழி: என் அப்பா விவசாயத் துறையில் இருந்தவர். அவர் தான் இந்த செடி வளர்ப்பிற்கு ரோல் மாடல். எனக்குச் சின்ன வயசுல உடம்பு சரியில்லாம போனா, மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போக மாட்டாரு. வீட்டுல இருக்கற மூலிகை செடிகள்ல இருந்து தான் மருந்து எடுத்துக் கொடுப்பார். அதுலயே சரியாயிடும். அவர் சொல்லிக் கொடுத்த நல்ல பழக் கம் தான் இன்று வரை தினமும் காலையில் தோட்டத்துல இருந்து இரண்டு துளசி இலையைப் பறிச்சு நான் வாயில போட்டுக்கறதுக்கு காரணம். நான் திருமணம் முடிஞ்சு புகுந்த வீடு வந்த வீட்டுலயும் தோட்டம் போட் டேன். இப்பவும் எங்க அப்பா என்னைப் பார்க்க வரும் போது, ஏதாவது புது வகையான இரண்டு நர்சரி செடிகள் வாங்கிட்டு தான் வருவார். என் தோட்டத்துல இருக்கற பல செடிகள் அப்பா வாங்கி கொடுத்தது தான். எங்க வீட்டுல பெரும்பாலும் மூலிகை செடிகள் தான் அதிகம் இருக்கும். அதை தோட்டம்னு சொல்ற தை விட மெடிக்கல் ஷாப், காய்கறி மார்க் கெட்ன்னு தான் சொல்லணும். எங்க வீட்டு தோட் டத்துல ரத்த அழுத் தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும் "கோளியஸ் கிழங்கு செடி' பல மருந்துகள் தயாரிக்க பயன்படும் கண்வலிகிழங்குச் செடி, பாம்பு கடிக்கு முதலுதவி சிகிச்சை தர உதவும் சிறியா நங்கை உட்பட பல மூலிகை செடிகளும், சிறு கீரை, தக்காளி, கத்தரிக்காய் உட்பட பல காய்கறி செடிகளும் இருக்கு. இப்ப நானும் என் பிள்ளைகளுக்கு ஏதாச்சும்னா உடனே மருத்துவமனைக்கு ஓடாம, என் தோட்டத் தில் இருக்கற செடிகளை வெச்சு கை வைத்தியம் பார்த்துக்கறேன். விடுமுறை நாட்கள்ல எங்க குடும் பத்துல எல்லாரும் இந்த தோட்டத்துல இருப்போம். அவ்ளோ குளுமையா, இருக்கும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us