/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விக்கிரவாண்டியில் 3வது நாளாக சாமியார் உண்ணாவிரத போராட்டம்விக்கிரவாண்டியில் 3வது நாளாக சாமியார் உண்ணாவிரத போராட்டம்
விக்கிரவாண்டியில் 3வது நாளாக சாமியார் உண்ணாவிரத போராட்டம்
விக்கிரவாண்டியில் 3வது நாளாக சாமியார் உண்ணாவிரத போராட்டம்
விக்கிரவாண்டியில் 3வது நாளாக சாமியார் உண்ணாவிரத போராட்டம்
ADDED : மே 31, 2010 01:28 AM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலை புதுப்பிக்க கோரி 3வது நாளாக சாமியார் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டியில் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
தற்போது பழுதடைந்துள்ள இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் திருகண்ணக்குடியை சேர்ந்த நாராயணசாமி என்கிற சாமியார் கடந்த 28ம் தேதி கோவிலின் முன்பு உண்ணாவிரதம் இருந்தார். இரண்டாவது நாளான நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் விழுப்புரம் இந்து அறநிலையதுறை ஆய்வாளர் நேரில் வந்த போது சாமியார் கோவிலுக்குள் இருந்துள்ளார்.ஆய்வாளர், சாமியாரிடம் கோரிக் கையை மனுவாக அலுவலகத்தில் எழுதி தரக் கூறியும், கோவிலுக்குள் உண்ணாவிரதம் இருக்க கூடாது, அரசு அனுமதி பெற வேண்டும் எனவும் ஆய்வாளர் கூறினார்.இதையடுத்து நேற்று காலை 10 மணிக்கு நாராயணசாமி, பெருமாள் கோவில் தெருமுனையில் அமர்ந்து உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.மேலும் கோவிலை புதுப்பிக்க வேண்டும் என இந்து அறநிலையத்துறை மற்றும் கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளார். கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் சாமியாரை கிராம முக்கியஸ்தர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் விக்கிரவாண்டிக்கு வருகின்ற பொதுமக்கள் சாமியாரை கும்பலாக பார்த்து செல்கின்றனர். இதனால் விக்கிரவாண்டியில் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.