Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விமானப்படை ஊழியர்களுக்கு குடியிருப்பு வளாகம்: கோவையில் பூமி பூஜை

விமானப்படை ஊழியர்களுக்கு குடியிருப்பு வளாகம்: கோவையில் பூமி பூஜை

விமானப்படை ஊழியர்களுக்கு குடியிருப்பு வளாகம்: கோவையில் பூமி பூஜை

விமானப்படை ஊழியர்களுக்கு குடியிருப்பு வளாகம்: கோவையில் பூமி பூஜை

ADDED : மே 29, 2010 02:46 AM


Google News

கோவை : "இந்திய விமானப்படை மற்றும் கடற்படையில் பணிபுரிபவர்களுக்காக நாடு முழுவதும் 39 குடியிருப்புத் திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன' என, விமானப்படை, கப்பல் படை ஹவுசிங் போர்டு டைரக்டர் ஜெனரல் கெய்க்வாட் கூறினார்.

இந்திய விமானப்படை மற்றும் கடற்படையில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, கோவை - சத்தி ரோடு அத்திப் பாளையம் சந்திப்பில் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.



விமானப்படை மற்றும் கடற்படைகளுக்கான ஹவுசிங் போர்டு டைரக்டர் ஜெனரல் கெய்க்வாட் கட்டுமானப் பணிகளை துவங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:விமானப்படை மற்றும் கடற்படை ஊழியர்களுக்காக நாடு முழுவதும் 39 குடியிருப்புத் திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் மொத்தம் 272 அடுக்குமாடி குடியிருப்புகளும் 100 தனி வீடுகளும் கட்டப்படுகின்றன. நீச்சல் குளம், சமுதாய மையம், ஜாகிங் பார்க், ஆடிட்டோரியம், கழிவு நீர் சுத்திகரிப்பு பிளான்ட், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட சகல வசதிகளுடன் குடியிருப்பு வளாகம் கட்டி முடிக்கப்பட உள்ளது. பசுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு குடியிருப்பு வளாகத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.



குடியிருப்புகள் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும். அனைவராலும் ஏற்கும் வகையில் நியாயமான விலையில் வீடுகள் வழங்கப்படும். இந்தியா முழுவதும் இதுவரை மொத்தம் 29 குடியிருப்புத் திட் டங்கள் முடிவடைந்து விட்டன. மேலும், 10 திட்டங்களை கட்டுவதற்கான பூமி பூஜை அடுத்த நான்கு மாதங்களில் நிறைவேற்றப்பட உள்ளது. போரில் மரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்கள், ஓய்வு பெற்ற வீரர்களுக்கு வீடு ஒதுக்குவதில் முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு, கெய்க்வாட் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us