/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/எப்.எஸ்.டி.ஏ., ஆங்கிலப்பள்ளி "சதம்'எப்.எஸ்.டி.ஏ., ஆங்கிலப்பள்ளி "சதம்'
எப்.எஸ்.டி.ஏ., ஆங்கிலப்பள்ளி "சதம்'
எப்.எஸ்.டி.ஏ., ஆங்கிலப்பள்ளி "சதம்'
எப்.எஸ்.டி.ஏ., ஆங்கிலப்பள்ளி "சதம்'
ADDED : மே 31, 2010 01:56 AM
புதுச்சேரி: திருபுவனை எப்.எஸ்.டி.ஏ., ஆங்கில உயர்நிலைப் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் 12வது முறையாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதிய 22 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் 15 பேர் 450 மதிப்பெண்களுக்கு மேலும், 18 பேர் 400 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றனர். மாணவர் செல்லதுரை 487 மதிப் பெண் கள் பெற்று பள்ளியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற் றுள்ளார். லலிதா 485 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், விக்னேஷ் 481 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும், வைத்தியநாதன் 480 மதிப்பெண் பெற்று 4ம் இடத்தையும் பிடித்தனர்.தனிப்பாடங்களில் தமிழில் சங்கீதபிரியன், திவ்யா இருவரும் தலா 97 மதிப் பெண், ஆங்கிலத்தில் திவ்யா 96 மதிப் பெண், கணித பாடத்தில் செல்லதுரை 100 மதிப்பெண், அறிவியலில் 4 மாணவர்கள் தலா 97 மதிப்பெண், சமூக அறிவியலில் தினேஷ், லலிதா ஆகிய இருவரும் தலா 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.பள்ளி முதல்வர் ஒயிட்தாசன் கூறுகையில், "கிராமப்புற மாணவர்களுக்கு கடந்த 25 ஆண்டுகளாக தரமான ஆங்கிலக் கல்வியை போதித்து வரும் இப் பள்ளி கடந்த 15 ஆண்டுகளாக எஸ்.எஸ். எல்.சி., பொதுத் தேர்வை சந்தித்து 12 முறை 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. வரும் காலங்களில் மாநில அளவில் சாதனை மாணவர்களை உருவாக்குவோம்' என்றார்.