Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அருந்ததியின மக்களின் துயரத்தை தீர்க்க நடவடிக்கை தேவை: 50 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை

அருந்ததியின மக்களின் துயரத்தை தீர்க்க நடவடிக்கை தேவை: 50 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை

அருந்ததியின மக்களின் துயரத்தை தீர்க்க நடவடிக்கை தேவை: 50 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை

அருந்ததியின மக்களின் துயரத்தை தீர்க்க நடவடிக்கை தேவை: 50 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை

ADDED : ஜூன் 01, 2010 02:00 AM


Google News

திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சி துப்புரவு தொழிலாளர் குடியிருப்பில் 50 ஆண்டுகளாக அடிப் படை வசதிகள் இல்லாமல் வசிக்கும் அருந்ததியின மக்களின் துயரைத் துடைக்க தமிழக அரசும், கலெக்டரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



திண்டிவனம் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு சென்னை நெடுஞ்சாலையில் திண்டிவனம் ஏரிக்கு அருகில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடத்தில் புதிய குடியிருப்புகள் கட்டி 26 துப்புரவு தொழிலாளர்கள் குடும் பத்துடன் வசிக்கின்றனர்.

இந்த வீடுகள் கல் சுவராலும், மேற்கூரை ஓடுகளாலும் ஆனது.திண்டிவனம் நகரில் உள்ள பகுதிகளில் துப்புரவு பணிகளை செய்யும் துப்புரவு தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் "அரை நூற்றாண்டு காலம்' ஆகியும் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் வசிக்கின்றனர். இங்கு 6 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்து குட்டிச் சுவராக நிற்கிறது. மீதமுள்ள 20 வீடுகளில் சுவர்கள் விரிசல் ஏற்பட்டு மேற்புறம் உள்ள ஓடுகள் உடைந்து அந்தரத்தில் தொங்கிய நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் வீடு முழுவதும் தண்ணீர் கசிவதால் ஒதுங்க இடமின்றி குழந்தைகளுடன் இரவு முழுவதும் கண் விழிப்பது இவர்களின் விதியாகிப் போனது.



நகராட்சி துப்புரவு ஊழியர் குடியிருப்பில் வசிக் கும் நாகவள்ளி (58) கூறியதாவது: எனது தந்தை கோவிந்தன், தாய் மரியம்மாள் இருவரும் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்தனர். அப் போது நான் 7 வயது சிறுமி தற்போது 58 வயதாகிறது. பெற்றோர் இறந்து விட்டனர். இது வரை எங்கள் பகுதிக்கு எந்த அடிப்படை வசதியும் அரசு செய்யவில்லை. மழைக் காலங்களில் அருகிலுள்ள திண்டிவனம் ஏரி நிரம்பி, எங்கள் குடியிருப்பை யொட்டிச் செல் லும் ஏரி வாய்க்கால் வழியே காவேரிப் பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும். மழைக்காலங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும். எங்கள் பகுதியை பார்வையிட அமைச்சர், எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன், கமிஷனர் என பலர் வந்து பார்த்து விட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறுவர். ஆனால் நடவடிக்கை இருக்காது.



தற்போது திண்டிவனம் ஏரியில் நகராட்சி புதிய பஸ் நிலையம் அமைக்க அதிகாரிகள் வந்து பார்வையிட்டு செல்கிறார்கள். புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிக்கு நகராட்சி துப்புரவு தொழிலாளர் குடியிருப்பை காலி செய்ய உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு குடியிருக்கும் எங்களுக்கு மனைப்பட்டா வழங்கவில்லை. எங்கள் குடியிருப்பை காலி செய்தால் குழந்தைகளுடன் தெருவில் தான் நிற்க வேண் டும். இங்குள்ள அனைவருக்கும் மனைப்பட்டா வழங்க வேண்டும், அல் லது வேறு இடத்தில் இலவச மனைப்பட்டா வழங்கி, தொகுப்பு வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



பள்ளி மாணவி ஜமுனாராணி கூறியதாவது: இங்கு குடிக்க தண் ணீர் வசதிகூட இல்லை. ஏரியில் உள்ள கிணற் றில் இருந்து கொண்டு வரும் தண்ணீர் குடிக்கவும், சமையல் செய்யவும் பயன் படுத்த முடியாது.நாங்கள் அரசுப் பள்ளிகளில் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்க வழியின்றி கஷ்டப்படுகிறோம். வேறு எங்காவது வாடகை வீடு பார்த்து குடியேறலாம் என்றால் எங்கள் பெற்றோர் நகராட்சி துப்புரவு தொழிலாளர்களாக இருப்பதால் எங்களுக்கு யாரும் வாடகை வீடு கொடுக்க மறுக்கிறார்கள் என கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தார்.



கார்த்திக் (22) கூறியதாவது: இங்கு நகராட்சி துப்புரவு தொழிலா ளர்கள், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற் றும் அவர்களது வாரிசுகள் வசித்து வருகிறோம். ஓய்வுபெற்ற தொழிலாளி குடும்பத்தில் தினம் கூலி வேலைக்குச் சென்றால் தான் வீட்டில் அடுப்பு எரியும். வறுமைக்கோட்டிற்கு கீழே வசிக்கும் தாழ்த்தப்பட்ட அருந்ததியின சமுதாயத் தைச் சேர்ந்த எங்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தராமல் அரசு புறக்கணித்து வருகிறது. 10 ஆண்டுகளாக குடிநீரை குடம் 3 ரூபாய் என பணம் கொடுத்து தான் வாங்கி பயன்படுத்துகி றோம். 50 ஆண்டுகளுக்கு மேல் இந்த குடியிருப்பில் வாழ்ந்தும் எங்களுக்கு மனைப்பட்டா வழங்கவில்லை. அனைவருக்கும் குடியிருக்கும் வீட்டை மனைப்பட்டா வழங்கி, வீடுகளை புதுப்பித்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். இல்லையேல் அரசுக்குச் சொந்தமான புறம் போக்கு இடத்தில் நில ஆர்ஜிதம் செய்து, இலவச மனைப்பட்டா வழங்கி அனைத்து அடிப்படை வசதிகளுடன்கூடிய வீடுகள் கட்டித்தர வேண்டும். 50 ஆண்டுகள் பின் னோக்கிச் சென்றுள்ள எங்களின் கண்ணீரை துடைக்க தமிழக அரசும், மாவட்ட கலெக்டரும், நகராட்சி நிர்வாகமும் உடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us