லஞ்ச வழக்கில் இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன்
லஞ்ச வழக்கில் இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன்
லஞ்ச வழக்கில் இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன்
ADDED : மே 29, 2010 03:38 AM
மதுரை:மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக சாமிநாதன், எஸ்.ஐ., ஆக மனோகரன் பணிபுரிந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியை சேர்ந்த சண்முகநாதனிடம், டூவிலர் காணவில்லை என சான்றிதழ் வழங்க சில நாட்களுக்கு முன், லஞ்சம் வாங்கும் போது சாமிநாதன், மனோகரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இவர்கள் ஜாமீன் கோரி ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர். அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி கே.பி.கே.வாசுகி உத்தரவிட்டார்.