Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/மனநிறைவே சொர்க்கம்

மனநிறைவே சொர்க்கம்

மனநிறைவே சொர்க்கம்

மனநிறைவே சொர்க்கம்

ADDED : ஜூலை 05, 2011 10:07 AM


Google News
Latest Tamil News
* அன்பை உணர வேண்டுமானால் அமைதியை அடைய முயல வேண்டும். தர்மத்தைப் பின்பற்றினால் தான் நமக்கு சாந்தி என்ற அமைதி கிடைக்கும், தர்மத்தைப் பின்பற்ற சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

* இறைவனை நம்முள் உணர்ந்து,< தாயை நாடும் குழந்தையைப் போல மனப்பூர்வமாக பக்தியில் ஈடுபட வேண்டும். பிரார்த்தனை என்பது உதட்டளவில் இல்லாமல் இதயத்திலிருந்தும் கனிவுடன் வரவேண்டும்.

* இறைவன் சத்தியத்தின் வடிவமாக இருக்கிறார். அவரை அடைய எண்ணும் பக்தர்கள் உண்மையைச் சார்ந்து நடக்க வேண்டும். அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும்.

* சொர்க்கத்தை நாம் தேடிப் போக வேண்டியதில்லை. நல்ல பண்புகளை பின்பற்றி வாழ்வதால் கிடைக்கும் மனநிறைவே சொர்க்கம்.

* நமக்கு எது வேண்டுமோ அதை ஆண்டவனிடம் கேட்பதில் தவறில்லை, ஆண்டவன் உங்களுடைய தகுதிக்கு ஏற்பக் கொடுத்தருள்வான்.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us